குட்கா முறைகேடு-தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம்
குட்கா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்ப்பது ஏன்என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளது. குட்கா ஊழல் புகார் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன் பின், நீதிபதிகள் பேசுகையில், “சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு எதிர்ப்பதை பார்த்தால், இந்த வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டியுள்ளது” என்று கூறினர். மேலும் “சிபிஐ விசாரணைக்கு ஒத்துக்கொண்டு நீங்கள் ஏன் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கக்கூடாது”என்றும் கேள்வி எழுப்பினர் என்பது குறிபிடத்தக்கது.