இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு என்னன்னு உங்களுக்கு தெரியுமா..??
புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை 1950 ஆம் ஆண்டு அமல்படுத்திய தேதிக்கு மரியாதை செலுத்துவதற்காக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தலைநகர் இந்தியா கேட்டில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்தியாவின் 69 வது குடியரசு தினத்தை கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் நுழைவாயில் நடைபெறும் அணிவகுப்பு என்பது மிகவும் சிறப்புவாய்ந்தாக இருக்கும். எப்பொழுதும் குடியரசு விழாவில் இரு நாடுகளை சார்ந்த தலைவர்கள் மட்டுமே பங்கேற்ப்பது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் புரூனி ஆகிய 10 நாடுகளில் இருந்து அந்நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக விழா மேடையின் அளவு பெரிதாக்கப்பட்டுள்ளது.
தினச்சுவடு சார்பாக அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்