ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! மகள், மாமியார் இருவரையும் திருமணம் செய்து கொண்ட 20 வயது இளைஞருக்கு நேர்ந்த சிக்கல்
கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், மகள் மற்றும் மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில ஆண்டுகளுக்கு முன், தனது 15 வயது மகளான ப்ரீத்தியை ரமேஷுக்கு திருமணம் செய்து வைக்க, ப்ரீத்தியின் தாய் முடிவு செய்தார். ஆனால் ப்ரீத்திக்கு திருமண வயதை எட்டாததால், ப்ரீத்தியின் தாயாய் மணமகள் பெயராக பதிவு செய்துள்ளார், ரமேஷ்.
ரமேஷ்க்கும் ஸ்ருதிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், வேலை விஷயமாக ரமேஷ் துபாய் சென்றுள்ளார். இந்த நேரத்தில், அகில் என்பவருடன் ப்ரீத்திக்கு காதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இருவரும் கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. துபாயில் இருந்து திரும்பி வந்த ரமேஷ் இந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்து போனார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ரமேஷ். அதில் பிரீத்தி கூறியதாவது, ரமேசை நான் திருமணம் செய்யவே இல்லை எனவும், தனது தாயை தான் ரமேஷ் திருமணம் செய்தார் என்றும் அதற்கான ஆவணங்களையும் தான் காண்பிப்பதாக விளக்கம் அளித்தார். இதனைக்கேட்ட காவல்துறையினர், குழம்பிப் போயினர்.