ஜெர்மனியில் துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு போதை கேக் பரிமாறிய ஹோட்டல்! தனியா போறாருனு நினைச்சிட்டாங்களா?
ஜெர்மனி நாட்டில், துக்க நிகழ்வுகளின் போது, இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின், அதில் பங்கேற்க வந்தவர்களுக்கு ஓட்டலில் ‘கேக்’கும், காபியும் பரிமாறுகிற கலாசாரம் நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில், வீதாகென் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில், ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக் மற்றும் காபி பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட 13 பேருக்கு குமட்டலும், தலை சுற்றலும் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக அண்மையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரித்த போது, மற்றோரு நிகழ்ச்சிக்காக தயார் செய்யப்பட்ட போதை கேக், துக்க நிகழ்விற்கு வருகை தந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஓட்டல் அதிபரின் மகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.