சுஜித் மரணம் ! முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை கடந்த சில தினங்களாக உலுக்கிய சம்பவம் சுஜித் என்ற சிறுவனின் மரணம்.இந்த சிறுவனின் மரணம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே.. சிறுவனின் மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுஜித் மரணம் குறித்து ஸ்டாலின் கூறுகையில்,தமிழக அரசின் மீது மெத்தன போக்கே காரணம் என்று தெரிவித்தார்.
இதற்கு முதலமைச்சர் பதில் கூறுகையில்,மீட்பு பணிகள் குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவறானது.அரசை குறை கூறுவதையை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்று தெரிவித்தார் .மேலும் ஸ்டாலின் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் பேசுவதாகவும் கூறினார்.
குழந்தை சுஜித் மரணத்தில் நான் எழுப்பிய கேள்விகளைப் போலவே, இன்று @dt_next பத்திரிகையும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்களின் மனங்களில் எழுந்திருக்கும் இந்தக் கேள்விகளுக்கு யார் மீதும் சினம் கொள்ளாமல், முதலமைச்சர் மனசாட்சியுடன் பதில் சொல்வாரா? pic.twitter.com/xKG4CNi34o
— M.K.Stalin (@mkstalin) October 30, 2019
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில் , குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் .நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்வி கேட்கவில்லை, சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுடைய சந்தேகத்தை கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.