காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Default Image

குமரி அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  பாலசந்திரன் கூறுகையில்,அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் உள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது.மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.குமரி கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்