பெற்றோர் அல்லாத குழந்தையை தத்தெடுங்கள்! படிப்பு செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன்! – ராகவா லாரன்ஸ் வாக்குறுதி!
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர்.
சுஜித் இரங்கல் குறித்து கருத்து தெரிவிக்கையில், ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ பெற்றோர் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுத்து அச்சிறுவனுக்கு சுஜித் என பெயர் விடுங்கள். அச்சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘ என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.