திரையரங்கில் அதிரடி சோதனை..! அதிக கட்டணம் வசூல் செய்த பணத்தை திருப்பிக்கொடுக்க வைத்த சார் ஆட்சியர்..!

வேலூர் மாவட்டத்தில் சோளிங்கரில் உள்ள ஒரு திரையரங்கில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது.இதை தொடர்ந்து ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் திடீரென அந்தத் திரையரங்கில் ஆய்வு செய்தார்.அதில் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்தது. நிர்ணயிக்கப்பட்ட ரூ.80 கட்டணத்தை விட அதிகமாக முதல் வகுப்பிற்கு 150 ரூபாயும் , பால்க்கனி 200 ரூபாயும் வசூலிக்கப்பட்டு தெரியவந்தது.
இதையடுத்து அதிகமாக வசூல் செய்த 33,830 ரூபாயை திரைப்படம் பார்க்க வந்த 589 பேருக்கு திருப்பி கொடுக்க உத்தரவு விட்டார். அதன்படி அதிகமாக வசூல் செய்த 33,830 ரூபாயை திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது .