ஆட்சி அமைப்பதில் சிக்கல் !ஆளுநரை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி உடன் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டது.தேர்தல் முடிவில் பாஜக 105 இடங்களிலும் ,சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றது.ஆனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதனிடையே பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரிவை தனித்தனியாக சந்திக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி உடன் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துள்ளார்.