அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை – வைரமுத்து
அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசு எந்திரத்தையோ
ஆழ்துளை எந்திரத்தையோ
குறை சொல்லும் நேரமில்லை;
குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.— வைரமுத்து (@vairamuthu) October 28, 2019
இந்தநிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.