தூத்துக்குடி விமானநிலையம் 2020க்குள் சர்வதேச தரம் உயர்த்தப்படும்..!
தூத்துக்குடியில் உள்ள விமான நிலையத்தில் தற்போது பணிகள் நடந்து வருகின்றனர். இந்நிலையில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறுகையில் , தூத்துக்குடியில் விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் இரவு நேர விமான சேவை தொடரும் என கூறினார்.
மேலும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான தமிழக அரசு நிலம் பெற்றுள்ளது .விமான நிலையத்தை விரிவாக்கத்திற்கு விமான நிலைய ஆணைய தலைவரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
விரைவில் அனுமதி கிடைக்கும் அதன்பின்னர் விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முழுவதும் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.