இன்று தீபாவளி ! பட்டாசு எப்போது வெடிக்கலாம்?
தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி உள்ளனர்.கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவித்தது.அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்’ என்றும் பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.