செயற்கைக்கோள் அனுப்பி ஆய்வு செய்கிற அதே காலக்கட்டத்தில் குழந்தையை மீட்கப் போராடி வருவது தலைகுனிவு -சீமான் ..!
திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று மாலை சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. சிறுவனை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் குழந்தை 30 அடியிலிருந்து 70 அடிக்கு சென்று கீழே இறங்கி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற செய்திகேட்டு பெருமைப்படுகிற அதே காலக்கட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவது வெட்கித் தலைகுனியவைக்கிறது. இனியும் தொடராது தடுக்க அரசு தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்க!
ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன் “என பதிவிட்டு உள்ளார்.