சிறுவன் மூச்சுவிடுவதை கண்டறிய முடியவில்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்
சிறுவன் மூச்சுவிடுவதை கண்டறிய முடியவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடுகாட்டுபட்டி என்ற கிராமத்தில் நேற்று சுர்ஜித் என்ற2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை சிறுவனை மீட்க போராடி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா மூலம் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
70, 80 அடியில் இருந்தாலும் சிறுவன் மூச்சுவிடும் சத்தம் கேட்டது.ஆனால், காலை 5.30 மணிக்கு பிறகு, சிறுவன் மூச்சுவிடுவதை கண்டறிய முடியவில்லை. உடல் நிலையையும் கணிக்க முடியவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.