சாண்டி மகளுடன் சின்னத்திரை நடிகை! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் பிரமாண்டமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி, இந்த வீட்டில் அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றியவர். அனைவருக்கும் இவரிடம் பிடித்த குணமும் இதுதான்.
இந்நிலையில், சாண்டியின் மகளான லாலாவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம். இதனையடுத்து. லாவுடன் இணைந்து, சின்னத்திரை நடிகையான சித்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,