"நல்ல தருணங்கள் மட்டுமே"- தோனி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரிஷாப் பண்ட்..!

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கு விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் தோனி இடம்பெறவில்லை. இந்நிலையில் ரிஷாப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.
அதில் “நல்ல தருணங்கள் மட்டுமே” என பதிவிட்டுள்ளார். மேலும் தோனியின் செல்ல நாயுடன் விளையாடும் புகைப்படத்தையும் ரிஷாப் பண்ட் பதிவிட்டுள்ளார்.வங்காளதேசத்துக்கு எதிரான விளையாடவுள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட பின் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்உலகக்கோப்பைக்கு பிறகு தோனி விளையாடவில்லை.எனவே ரிஷாப் பண்டை இப்போது நன்றாக ஊக்கப்படுத்தி வருகிறோம். அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை ஓரளவு பயன்படுத்தி வருகிறார்.
Good Vibes Only ???????????? ???? @msdhoni pic.twitter.com/sjtqTSU21f
— Rishabh Pant (@RishabhPant17) October 25, 2019
ரிஷாப் பண்ட்டிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். இந்நிலையில் தோனியை சந்தித்து ரிஷாப் பண்ட் பல ஆலோசனைகள் கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025