அவர் உன்னை முதுகில் குத்தவும் தயங்க மாட்டார்! ஸ்ரீ குமார் அதிரடி!
பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியார் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீ குமார் மீது, கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார். மஞ்சு வாரியார் இயக்குனர் ஸ்ரீ குமார் இயக்கிய விளம்பர படம் ஒன்றிலும், மோகன்லாலை வைத்து இயக்கிய ஓடியன் படத்திலும் நடித்துள்ளார்.
இதனையடுத்து, மஞ்சு வாரியார் அளித்துள்ள புகார் குறித்து இயக்குனர் ஸ்ரீ குமார் அவர்கள் கூறுகையில், ‘ என்னுடைய நண்பர்கள் மஞ்சு வாரியாருக்கு நான் இக்கட்டான சமயங்களில் உதவி செய்த போது, என்னை எச்சரித்தார்கள். மஞ்சு வாரியரை பொறுத்தவரை அவருடைய தேவை முடிவடைந்து விட்டால் உன்னை முதுகில் குத்தவும் தயங்கமாட்டார் என்று கூறினார்கள்.
அதனால் மஞ்சு வாரியாருக்கு இக்கட்டான நேரங்களில் நான் உதவியாக இருந்ததை மறந்துவிட்டு, அவர் இவ்வாறு புகார் அளித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவற்றை நான் சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள போகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.