பயப்படாதீங்க தளபதி விஜய்! தைரியம் கூறும் சீமான்!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருப்பது வழக்கம் தான்.
அந்த வகையில், இவரது நடிப்பில் வெளியான சர்கார் படமும், தற்போது நடித்துள்ள பிகில் படமும் அரசியலை விமர்சிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. சர்க்கார் படம் வெளியாவதற்க்கு முன் அரசியல் பிரபலங்கள் சில படத்தை வெளியிடுவதில், சிக்கல் ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டனர். தற்போது, பிகில் படத்திற்கு அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சி தலைவர், சீமான் அவர்கள், தூத்துக்குடியில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘அரசின் அச்சுறுத்தலுக்கு விஜய் பயப்படக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர்.’ என்று கூறியுள்ளார்.