வரலாறு காணாத உயரத்தில் பெட்ரோல் விலை !கேரளா முழுவதும் கடையடைப்பு ,வேலை நிறுத்தும் ……

Default Image

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
பெட்ரோல் – டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 12 காசுகளாகவும் டீசல் விலை 66 ரூபாய் 84 காசுகளாகவும் உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 74 ரூபாய் 91 காசுகளைத் தொட்ட நிலையில் அதைவிட அதிகமாக தற்போது உயர்ந்துள்ளது.
டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 72 ரூபாய் 36 காசுகளாகவும் மும்பையில் 80 ரூபாய் 23 காசுகளாகவும், கொல்கத்தாவில் 75 ரூபாய் 7 காசுகளாகவும் உள்ளது.

டீசல் சென்னையில் லிட்டர் ஒன்றுக்கு இன்று 66 ரூபாய் 84 காசுகளாக இருக்கிறது. டெல்லியில் 63 ரூபாய் 18 காசுகளாகவும், மும்பையில் 67 ரூபாய் 28 காசுகளுக்கும், கொல்கத்தாவில் 65 ரூபாய் 84 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் விற்பனையாகிறது. இவை தவிர பல்வேறு நகரங்களிலும் பெட்ரோல் – டீசல் விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
இதனால்  கேரளா முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் லாரிகள் ஓடவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாயையும், டீசல் 66 ரூபாயையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனைக் கண்டித்து கேரளாவில் இன்று பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
Image result for kerala bandh for petrol rate increases
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துக்கள் தமிழக கேரளா எல்லையான களியக்கவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் எல்லைப் பகுதியான களியக்கவிளையில் தவித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று கேரளாவில் முழு வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையான களியக்கவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டன
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்