ஆதார் என் குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

Default Image

அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் ஒன்றே போதுமானதா என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதே போன்று ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டனர்.
முன்னதாக, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மக்களுக்கு ஆதார் எண் பெறுவதற்கு உரிமை இருந்தாலும், அவற்றைக் கட்டாயமாக்கக் கூடாது என்று வாதாடினார். தனிநபர் உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை என்று அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கு முன் விசாரணை விவரம்:
தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்களது தகவல்களை தருமாறு நிர்பந்திப்பது ஏன் என தனித்துவ அடையாள ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியிருந்தது. ஆதார் அட்டையின் செயல்பாட்டுக்கு எதிரான பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.
இந்நிலையில் மனுதாரர்கள் சார்பில் நேற்று வாதம் செய்த மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமது வாதங்களை முன்வைத்தனர். தனியார் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் தங்கள் விவரங்களைத் தெரிவிப்பதற்கு கட்டாயப்படுத்த முடியாது என்ற வாதத்தை அடுத்து மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சரமாரியான கேள்விகளைத் தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்