10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ! தேர்வு நேரம் நீட்டிப்பு
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 3 மணி நேரம் தேர்வு எழுத அனுமதி அளித்த நிலையில் பின்னர் அது இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது.ஆனால் தற்போது இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத உள்ள நிலையில் தேர்வு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள இரண்டரை மணி நேர தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.