காலில் விழுந்த ரசிகர்..!செருப்பை எடுத்து வீசிய குவின்டன் டி காக் ..!
ராஞ்சியில் இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பாதுகாப்பு தடைகளை மீறி மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களை சென்று கைகொடுப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடையை மீறி மைதானத்துக்குள் நுழைந்து தென்னாபிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் காலில் விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த மைதான ஊழியர்கள் அந்த ரசிகர் மைதானத்திலிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது அந்த ரசிகரின் காலில் இருந்த செருப்பு ஒன்று மைதானத்தில் தவறு விட்டுவிட்டார்.
இதைப்பார்த்த குவின்டன் டி காக் அந்த செருப்பை தன் கையால் எடுத்து அவரிடம் தூக்கி வீசினார். டி காக்வின் இந்த செயல் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது