மின்சாரம் இல்லாமல் மெழுகுவர்த்தி மூலம் வாக்குப்பதிவு ..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் புனே தொகுதியிலுள்ள சிவாஜி நகர் வாக்குச்சாவடியில் திடீரென மின்சாரம் நின்றது. வாக்குச்சாவடியில் மின்சாரம் இல்லாததால் வாக்குச்சாவடி இருண்டு காணப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரி உள்ளதால் வாக்குப்பதிவு சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.
இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதன் உதவி உடன் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்து வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுகுறித்து தேர்தல் அலுவலர் சஞ்சய்பதேரே கூறுகையில் , பள்ளியில் மின்சாரம் இல்லை. மின்சாரம் மீட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் மதியம் வரை மின்சார இல்லாத நிலையில் தேர்தல் ஆணையத்தால் ஜெனரேட்டர் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.