விஷால் "ஆக்சன்" படத்தின் 'நீ சிரித்தால்' பாடல் வெளியீடு !
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அக்சன்’. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீண்டும் தமன்னா நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகின்ற நவம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் ‘நீ சிரித்தால்’ என்ற பாடல் நாளை (அக்.22) வெளியிடுவதாக அறவித்துள்ளனர்.