பசு வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றம்..!

Default Image

சென்னை திருமுல்லைவாயிலை  சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு சொந்தமான பசு ஒன்று சமீபத்தில் கன்றுகுட்டி ஒன்றை ஈன்றது. இந்நிலையில் பசுவுக்கு திடீரென சாணம் , சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து முனிரத்தினம் அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு பசுவை கொண்டு சென்றுள்ளார்.பசுவை பரிசோதனை செய்த மருத்துவர் மேல் சிகிசையாக அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லுமாறு அவர் அறிவுரை கூறினார்.
இதனால்  முனிரத்தினம் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் வேப்பேரி உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பசுவை கொண்டு சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் பசு வயிற்றுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அதன்படி கால்நடை மருத்துவக் கல்லூரி இயக்குனர் எஸ். பாலசுப்பிரமணியன் தலைமையில் மருத்துவ குழுவினர் பசுவிற்கு சுமார் 5 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் பசுவின் இரைப்பையிலிருந்து 52 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
இந்த கழுவுகள்  கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இரைப்பையில்  தொடர்ந்து தங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் தற்போது பசு  நன்றாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது  மட்டுமல்ல பசு, ஆடு மாடு போன்ற பிராணிகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்படுத்ததலை முற்றிலும் நிறுத்த வேண்டும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k