திருமணமான சில மணி நேரத்திலே மகளை எரித்து சாம்பலாகிய பெற்றோர்கள்..!
ஆந்திர மாநிலத்தில் உள்ள ரெட்ல பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகள் சாந்தனி.இவர் வேற்று சாதியை சார்ந்த நந்தகுமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு வெங்கடேஷ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சாந்தனி நந்தகுமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த செய்தி சாந்தனி தந்தை வெங்கடேஷ் , தாய் அமராவதி மற்றும் உறவினர்களுக்கு தெரிய வர கோபம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து திருமணம் ஆன சில மணி நேரத்திலேயே சாந்தனியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சாந்தனியை சிறிது நேரத்தில் தங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊர் மக்களிடம் சாந்தனி பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சாந்தனி உடலை அவசரஅவசரமாக பெட்ரோல் ஊத்தி கொளுத்தி அவரது சாம்பலை அங்கிருந்த நீரிலும் கரைத்துள்ளனர். சாந்தனியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரிகள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சாந்தனியை அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் கயிறால் கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு நாடகமாடிய சம்பவம் அம்பலமானது. இதைத் தொடர்ந்து தந்தை வெங்கடேஷ் ,தாய் அமராவதி , முனிராஜ் மற்றும் வர மூர்த்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.