ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று தேர்தல்
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று (அக்டோபர் 21-ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.மேலும் ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.ஹரியானாவில் பாஜக-காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
இதற்காக இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.இரண்டு மாநிலங்களிலும் இன்று (21-ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.24-ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.