இரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்டால் இந்த பிரச்சனை வர வாய்ப்பு..!
இன்றையகாலத்தில் சிறுவர்கள் ,இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் உள்ளது. இது அதிகமாக ஃபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கின்றன.
நூடுல்ஸ் என்பது ஒரு திட உணவு. இந்த நூடுல்ஸ் அதிக நேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பசி அதிகம் எடுக்கும்போது இதை சாப்பிடலாம். ஆனால் இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் சில பிரச்சனைகள் ஏற்படும்.
இரவு நூடுல்ஸ் சாப்பிட்டால் நூடுல்ஸில் உள்ள கொழுப்பு நாம் தூங்கும் போது உடலின் எடை அதிகரிக்கச் செய்யும்.
மேலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் அஜீரண கோளாறும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரங்களில் நூடுல்ஸ் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.