உலகநாயகன் பிறந்தநாளுக்கு சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு தர்பார் சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 7ஆம் தேதி தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரானது பின்னணி இசையுடன் சேர்த்து வெளியிடப்படும் என அறிவித்தார்.
நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025