தேர்வில் பார்த்து எழுதுவதை தடுக்க கல்லூரியின் திட்டம்..!
கர்நாடக மாநில ஹவேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் தேர்வில் பார்த்து எழுதிவிட கூடாது என்பதற்காக மாணவர்களின் தலையில் காளியான அட்டை பெட்டியை வைத்து நடத்ததப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி அணிந்தபடி தேர்வு எழுதிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக கர்நாடக டிபிஐ-யின் துணை இயக்குநர் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தனது டிவிட்டரில் “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்களை விலங்குகள் போன்று நடத்தும் உரிமையை யாருக்கும் கிடையாது” என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.