7 பேரை விடுதலை: தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர்?விளக்கம் அளிக்க ஸ்டாலின் வேண்டுகோள்
7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என க ஆளுநர் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து விளக்கம் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
“பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் https://t.co/6pjC8oSIs1
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என முதலமைச்சரிடம், தமிழக ஆளுநர் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விளக்கம் தந்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.