காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை- பிரதமர் மோடி
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது .அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது .
மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, அரசை விமர்சித்து காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை, பாகிஸ்தான் தமக்கு சாதகமாக பயன்படுத்தியது என்றும் தெரிவித்தார்.