ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் என்றும் முதலமைச்சராக முடியாது,
அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.