பிரபல பாலிவுட் நடிகர் அமிர்தப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி!

Default Image

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 1982-ம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில், இவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில், ஹெப்பாடிட்டீஸ் பி என்ற வைரஸ் இருந்துள்ளது. இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலலிழந்துள்ளது.
இந்நிலையில் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு இவர் சினிமாவில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து செவ்வாய் கிழமை நள்ளிரவு  2 மணிக்கு திடீரென இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மும்பையிலுள்ள சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
இவருக்கு தனி அறையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், இவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்