கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைக்கவில்லை! நடிகை ராகுல் ப்ரீத் சிங் வருத்தம்!
நடிகை ராகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது கமலஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ஒரு இடத்திலும் நடித்து வருகிறார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம், நீங்கள் தமிழில் அதிக படம் நடிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், எல்லா மொழிகளிலும் அதிக படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. எனவே கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், இனி எல்லா வாய்ப்புகளையும் ஏற்க மாட்டேன். எனக்கு மிகவும் பிடித்த கதையும், கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ளார்.