நன்றாக நேசித்த அழகான உறவை அதிகாரபூர்வமாக முறித்து விட்டோம்! காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்!

நடிகர் மனோஜ் மஞ்சு பிரபலமான தெலுங்கு நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன் பாபுவின் மகனும் ஆவார். இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் தான் நடித்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான பிரணிதியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மனோஜ் இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார்.
இதனையடுத்து தற்போது இவர் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கனத்த இதயத்துடன் இதை தெரிவிக்கிறேன். கருத்துவேறுபாடு காரணமாக, 2 வருடமாக நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். சில சுயபரிசோதனைக்கு பிறகு மிகுந்த வலியுடன், கடந்த 2 வருடத்துக்கு முன் விவாகரத்து பெற்றுவிட்டோம். நன்றாக நேசித்த அழகான உறவை அதிகாரபூர்வமாக முறித்துக் கொண்டோம் என்று இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.