சென்னை உட்பட தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் கடத்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவித்த தேதிக்கு முன்னதாகவே தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .மீனவர்கள் மாலத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.