ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது….அவருக்கு சினிமாதான் சரி …..
ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது என, பாலிவுட் இயக்குநர் நானா படேகர் தெரிவித்துள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி மற்றும் சின்னத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காலா படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தமது கருத்தை கூறியுள்ளார். இந்திய அரசியலை கடுமையாக விமர்சித்துள்ள அவர், நல்லவர்கள் அரசியலில இறங்க முடியாது எனவும் கூறியுள்ளார். ரஜினி மிக எளிமையான மனிதர் என்றும், அவருக்கு அரசியல் சரிபட்டு வராது எனவும் படேகர் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காலை ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த் அரசியலில் நுழைய தனக்கு பயமில்லை என்றும் யுத்தம் செய்வதற்கான நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார் . வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …