கவர்னரை எதிர்த்து போராடுகிற முதல்வராக உள்ளார் நாராயணசாமி -ஸ்டாலின்
கவர்னரை எதிர்த்து போராடுகிற முதல்வராக உள்ளார் நாராயணசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இலவச அரிசி, வேட்டி சேலை போன்ற திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார் கவர்னர் கிரண் பேடி.
கவர்னரை எதிர்த்து போராடுகிற முதல்வராக உள்ளார் நாராயணசாமி.10 பேனர்களுக்கு அனுமதி வாங்கிக்கொண்டு 100 பேனர்கள் வைக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.