சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்..!
டி20 உலக கோப்பை போட்டிக்கான தகுதி போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 14 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் அரபு எமிரேட்ஸ் அணியும் ஓன்று.இந்த அணி சூதாட்டத்தில் தற்போது சிக்கியுள்ளது.
அணியின் கேப்டன் முகமது நவீத் , அன்வர், கதீர் முகமது ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உள்ளுர் வீரர் மெஹர்தீப் உடன் சேர்ந்து இவர்கள் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நவீத் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய கேப்டனாக சுழல்பந்து வீச்சாளர் அகமது ராசா நியமிக்கப்பட்டு உள்ளார்.