பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, மாதர் சங்கத்தின் சார்பில் போராட்டம்…!!
கோவை : அரசுக்கு எதிராக வாக்குகள் பெறும் இயக்கம் தொடங்கியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையின் முன்பு நியாயம் மற்றும் அநியாயம் என இரண்டு பெட்டிகளில் வாக்கு பெட்டி, வாக்கு சீட்டுகளுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட குழுசார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. திரளாக மக்கள் பஸ் கட்டண உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.