“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து !” – கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் வருகின்ற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர்.
வரும் 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவதால் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ “திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து” என்று விமர்சனம் செய்துள்ளார். இதனால் ராஜூ தற்போது பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024