சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு !ஜெயகோபால் வழக்கு அக்டோபர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
பேனர் விழுந்த விவகாரத்தில் ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு அக்டோபர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த நிலையியில் இன்று வழக்கின் விசாரணை அக்டோபர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.