புதிய அவதாரம் எடுக்கும் நடிகை ராதிகா!

Default Image

நடிகை ராதிகா பிரபலமான திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தமிழில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சீரியலில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த ராதிகா தற்போது, டிவி தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று கோடீஸ்வரி என்ற பெண்களுக்கான கேம் ஷோ ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சிக்கான போட்டோசூட்டை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளதாகவும், விரைவில் ஆடிசனும் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்