ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும் – அமைச்சர் ஜெயக்குமார்
ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக நிலைத்து நிற்கும்.அம்மா அவர்கள் கூறியபடி உலகம் உள்ளவரை அதிமுக நிலைத்து நிற்கும். தமிழகத்தில் அதிமுகவை விட பெரிய இயக்கம் எதுவும் இல்லை.
ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும். உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும். அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்