அப்துல் கலாமின் குடும்பத்தினரை சந்தித்த கஸ்தூரி..!
நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் அறிமுகமாகினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகிறார். இவர் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ்3 நிகழச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், இவர் விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா அவர்களின் 88வது பிறந்த நாளான நேற்று(அக்.15), அப்துல் கலாம் சமாதிக்கு சென்று வழிபட்டுள்ளார். அதுமட்டுமின்றி இவர் அப்துல் கலாம் குடும்பத்தாரையும் சந்தித்து பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்த கஸ்தூரியை இந்த செயலால் பலர் வாழ்த்தியுள்ளனர்.
Blessed to be in rameswaram …on the Kalam trail… humbled by the love of the APJ family… thrilled by the youth of 103 yr old shri APJM maraikair! Touched by the family's affection … inspured by Dr Kalam's legacy #HBDAbdulKalam #APJAbdulKalam pic.twitter.com/pMVBvqpdq0
— Kasturi (@KasthuriShankar) October 15, 2019