சிலிண்டர் டெலிவரி போது டிப்ஸ் வசூல் தடுக்க என்ன நடவடிக்கை..! நீதிமன்றம் கேள்வி..!
வீடுகள் மற்றும் கடைகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிலிண்டரை நேரடியாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ பதிவு செய்கின்றனர்.
சிலிண்டர் டெலிவரி செய்யும் போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதாக பல புகார்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுந்தன. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்விகள் எஎழுப்பினர்.
மேலும் நவம்பர் 1-ம் தேதிக்குள் எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.