பட்டாசு வழக்கு -உச்சநீதிமன்றம் கைவிரித்தது…!

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு  ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என  அறிவித்தது.
மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பட்டாசை மட்டும் தயாரிக்க உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனால் பட்டாசு தொழிலில் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைத் தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க  பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பட்டாசு வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாப்டே, அயோத்தி வழக்கை விசாரிப்பதால் பட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் கைவிரித்தது.

author avatar
murugan