"கைதி" படத்திற்கு U/A சான்றிதழ்…! பிகிலுடன் கண்டிப்பாக மோதுகிறது..!

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “கைதி” படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது கைதி படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்” படமும் தீபாவளி அன்று தான் திரைக்கு வருகிறது. இத்துடன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கு கிடைக்காது என்பதால் சங்கத்தமிழன் விலகியது.
தற்போது விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி மட்டுமே தீபவாளிக்கு மோதுவது உறுதியாகியுள்ளது.

author avatar
Vidhusan