கொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..!
கடந்த 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜுவல்லரி இதில் சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் கொள்ளையடிக்கப்பட்ட தாக விசாரணையில் தெரியவந்தது.
இதனால் போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 3-ம் தேதி திருவாரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் அவரை மடக்கி விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகளை கைப்பற்றினர். சுரேஷ் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
சமீபத்தில் செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் சுரேஷ் திருச்சியில் உள்ள மத்தியசிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் சுரேஷை போலீசார் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம் கொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது.